Friday, August 13, 2010

ஏழை இந்தியா


உலகத்தில் வறிய நாடு எது என்று யாரிடம் கேட்டாலும் வரும் ஒரே பதில் ஆபிரிக்க கண்ட நாடுகள்தான் என்றுதான்.

அதைவரிசைப்படுத்தினால் கொங்கோவிலிருந்து எத்தியோப்பியாவரை அழகாக ஒழுங்குபடுத்தி கூறுவர்.

சரி இப்படி இவர்கள் கூறுவதற்கு எதை அடிப்படையாக வைத்திருக்கிறார்கள்...! ஒரு நாட்டின் தனிநபர் வருமானத்தையயா? இல்லை ஒரு நாட்டில் போஷாக்கின்மையால் இறந்துபொகும் குழந்தைகளின் எண்ணிக்கையினை கொண்டா? சரி எதுவாக இருந்தாலும் குறித்த அந்த நாடு உண்மையான தகவலினை தந்தாலே ஒளிய நாங்கள் இந்தநாடுதான் வறுமையான நாடு, இந்த நாடுதான் மிக ஏழ்மையான நாடு என்பதை நாம் அறுதியிட்டு கூறமுடியும்.

சரி இப்போ, நாம் இந்தியா பக்கம் பார்ப்போம் இந்தியாவின் மத்திய பிரதேசம், பீகார் இந்த மானிலங்களில் நிலவாத வறுமையா ஆபிரிக்க கண்டத்தில் நிலவுகிறது?

இங்கு பிறக்கின்ற குழந்தைகளை விடவா ஆபிரிக்க நாடுகளில் போசாக்கின்மையான குழந்தைகள் பிறக்கின்றன?

இதை நாம்யாராவது சிந்தித்து பார்த்திருக்கின்றோமா?

உலகின் மிகப்பெரிய மூன்றாவது இராணுவப்படையினை கொண்டிருந்தால் இந்தியா ஏழைநாடுகளின் பட்டியலினுள் வந்துவிடாதா...?

"மேற்சொன்ன இந்த விடையம் பற்றியதாக ஓர் விவரணம் பிரித்தானிய வானொலி ஒன்றில் சென்ற நிகழ்ச்சி உங்களிற்காக ஒலி மற்றும்ஒளி வடிவில்"இங்கே செடுக்கிப்பாருங்கள்

No comments: