Friday, February 29, 2008

இந்திய நரகம்...


ஒரு மானிடன் அதுதாங்க......... மனுசன். இறந்து செர்க்கத்துக்கு போனானாம் அங்க பார்த்தா விதவிதமான நரகம் ஒவ்வொரு நாட்டுக்குமாக இருந்துச்சு. நம்மாள தெரியாதா எப்பவுமே வெளிநாட்டு மோகம் தானே முதல்ல இலண்டன் நரகத்துக்கு போய் என்னதான் நடக்குமெண்டு கேட்டார்,
அங்க இருந்தவங்க சென்னாங்களாம் இங்க முதல்ல மின்சார நாற்காலியில உட்கார வைப்பாங்க பிறகு சின்னதா 5நிமிச பிறேக் அதுக்குப்பிறகு ஆணிப் படுக்கையில ஒருமணித்தியாலம் படுக்கவைப்பாங்க அதுக்கும் பிறகு இலண்டன் பேய்களேடு உங்கள தங்கவைச்சிடுவாங்க எண்டு.
நம்மாள் மிரண்டுபோய் இதல்லாம் நமக்கு சரிவராதெண்டு அமெரிக்க நரகம், கனடா நரகம், ஜேர்மன் நரகம் என்டு எல்லா நரகத்தையும் ஒரு அலசு அலசிட்டு வந்து பார்த்தா எல்லாமே இலண்டன் நரகத்திற்கு கொஞச் கூடக் குறச்சலாதான் இருந்திச்சு.
நம்மாழும் வெறுத்துப்போய் எங்கடா தண்டன எல்லாம் குறச்சலாய் கிடைக்குமெண்டு தேடிக்கொண்டு வந்தா இந்திய நரகத்திற்கு கிட்டவா பெரிய லைனே நிண்டிச்சாம் உடன ஓடிப்போய் என்னென்ன தண்டண அங்க குடுபடுகுது எண்டு பார்த்தா அங்கயும்.......
மின்சார நாற்காலியில உட்கார வைப்பாங்க பிறகு சின்னதா 5நிமிச பிறேக் அதுக்குப்பிறகு ஆணிப் படுக்கையில ஒருமணித்தியாலம் படுக்கவைப்பாங்க அதுக்கும் பிறகு இந்திய பேய்களேடு உங்கள தங்கவைச்சிடுவாங்க. என்னடா இதுதானே எல்லா இடத்திலயும் நடக்குது பிறகு ஏன் இங்க மட்டும் இவ்வளவு சனம் எண்டு பார்த்தா.........

என்னங்க கண்டுபிடிச்சிட்டீங்களா.......?..........?.........?...
**

**

**

**

**

இந்திய நரகமும் இந்தியா மாதிரித்தானாம் பராமரிப்பு என்றது கிடையவே கிடையாதாம் மின்சார நாற்காலிக்கு ஒழுங்கா மின்சாரம் வராது,

ஆணிப்படுக்கையில இருந்த ஆணியெல்லாம் திருட்டுப்போச்சு,

இந்திய பேய்களெல்லாம் இந்திய அரசாங்கத்தில முந்தி வேலைபார்த்ததுகளாம் so.....
பழக்கதோசத்தில எல்லா பேயும் காலையில சைன்பண்ணீட்டு கன்டீனுக்கு போய்விடுமாம்
அப்ப பாருங்களேன். ........ ............ ............

1 comment:

இறக்குவானை நிர்ஷன் said...

வணக்கம் ஜெயம். பெயரிலேயே வெற்றியுடன் வந்திருக்கிறீர்கள். சிரித்து மகிழ்ந்தேன்.
நீங்கள் 40 ஆவது இலங்கைப் பதிவர் என மாயா சொன்னார்.
வருக. வாழ்த்துக்கள். தொடர்ந்தும் இணைந்திருங்கள்.