Wednesday, February 27, 2008

அஞ்சலிகள்........


எழத்தாளனின் புகளுக்கில்லை மரணம் ஆனாலும் புகளுடலிற்கிருக்கும் மரணத்தை தவிர்க்கமுடியாதல்லவா இந்த வகையில் மிகப்பெரிய எழுத்துலக சீடர்களைப்பெற்ற முன்னோடி எழுத்தாளர் சுஜாதா எனப்படும் ரங்கராஜனிற்கு எமது அஞ்சலிகள்........

சங்கரின் இயக்கத்தில் சுஜாதாவின் கதை வசனத்தில் வெளிவந்து இன்றும் எம் கண்ணைவிட்டகலாமலுள்ளது சிவாஜி திரைப்படம் ஆயினும் அந்த வசனத்திற்கு சொந்தக்காரர் எம்முடன் இல்லை என்னும்போது எழும் கவலையினை தவிர்க்கமுடியவில்லை.


அவர் எழதிய காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, விக்ரம், வானம்வசப்படும் போன்ற நாவல்கள் தான் எம்மைவிட்டகன்றுவிடுமா இல்லை அவை பின்னர் திரைப்படமாக்கப் பட்டடது தான் இல்லைஎன்றாகிவிடுமா?

அதுமட்டுமன்றி அவரது கதை, வசனத்தில் வெளிவந்த ரோஜா, இந்தியன், முதல்வன், பாய்ஸ், விசில், கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்தஎழுத்து, அந்நியன், சிவாஜி திரைப்படங்கள் தானும் எம் மனதில்நின்று நீங்கிவிடுமா?


இவ்வாறு தான் நீங்கினாலும் தன் புகளினை விட்டுச்சென்ற சுஜாதாவின் பாதையினை நாம் முன்னெடுப்போமாக....

1 comment:

மாயா said...

சுஜாதாவின் மறைவு தமிழ் இலக்கிய உலகிற்கு பேரிழப்பு என்பதை மீண்டும் ஒரு முறை சொல்லத் தேவையில்லை.

அவருக்கு என் அஞ்சலிகள்