Friday, February 29, 2008

இந்திய நரகம்...


ஒரு மானிடன் அதுதாங்க......... மனுசன். இறந்து செர்க்கத்துக்கு போனானாம் அங்க பார்த்தா விதவிதமான நரகம் ஒவ்வொரு நாட்டுக்குமாக இருந்துச்சு. நம்மாள தெரியாதா எப்பவுமே வெளிநாட்டு மோகம் தானே முதல்ல இலண்டன் நரகத்துக்கு போய் என்னதான் நடக்குமெண்டு கேட்டார்,
அங்க இருந்தவங்க சென்னாங்களாம் இங்க முதல்ல மின்சார நாற்காலியில உட்கார வைப்பாங்க பிறகு சின்னதா 5நிமிச பிறேக் அதுக்குப்பிறகு ஆணிப் படுக்கையில ஒருமணித்தியாலம் படுக்கவைப்பாங்க அதுக்கும் பிறகு இலண்டன் பேய்களேடு உங்கள தங்கவைச்சிடுவாங்க எண்டு.
நம்மாள் மிரண்டுபோய் இதல்லாம் நமக்கு சரிவராதெண்டு அமெரிக்க நரகம், கனடா நரகம், ஜேர்மன் நரகம் என்டு எல்லா நரகத்தையும் ஒரு அலசு அலசிட்டு வந்து பார்த்தா எல்லாமே இலண்டன் நரகத்திற்கு கொஞச் கூடக் குறச்சலாதான் இருந்திச்சு.
நம்மாழும் வெறுத்துப்போய் எங்கடா தண்டன எல்லாம் குறச்சலாய் கிடைக்குமெண்டு தேடிக்கொண்டு வந்தா இந்திய நரகத்திற்கு கிட்டவா பெரிய லைனே நிண்டிச்சாம் உடன ஓடிப்போய் என்னென்ன தண்டண அங்க குடுபடுகுது எண்டு பார்த்தா அங்கயும்.......
மின்சார நாற்காலியில உட்கார வைப்பாங்க பிறகு சின்னதா 5நிமிச பிறேக் அதுக்குப்பிறகு ஆணிப் படுக்கையில ஒருமணித்தியாலம் படுக்கவைப்பாங்க அதுக்கும் பிறகு இந்திய பேய்களேடு உங்கள தங்கவைச்சிடுவாங்க. என்னடா இதுதானே எல்லா இடத்திலயும் நடக்குது பிறகு ஏன் இங்க மட்டும் இவ்வளவு சனம் எண்டு பார்த்தா.........

என்னங்க கண்டுபிடிச்சிட்டீங்களா.......?..........?.........?...
**

**

**

**

**

இந்திய நரகமும் இந்தியா மாதிரித்தானாம் பராமரிப்பு என்றது கிடையவே கிடையாதாம் மின்சார நாற்காலிக்கு ஒழுங்கா மின்சாரம் வராது,

ஆணிப்படுக்கையில இருந்த ஆணியெல்லாம் திருட்டுப்போச்சு,

இந்திய பேய்களெல்லாம் இந்திய அரசாங்கத்தில முந்தி வேலைபார்த்ததுகளாம் so.....
பழக்கதோசத்தில எல்லா பேயும் காலையில சைன்பண்ணீட்டு கன்டீனுக்கு போய்விடுமாம்
அப்ப பாருங்களேன். ........ ............ ............

Wednesday, February 27, 2008

அஞ்சலிகள்........


எழத்தாளனின் புகளுக்கில்லை மரணம் ஆனாலும் புகளுடலிற்கிருக்கும் மரணத்தை தவிர்க்கமுடியாதல்லவா இந்த வகையில் மிகப்பெரிய எழுத்துலக சீடர்களைப்பெற்ற முன்னோடி எழுத்தாளர் சுஜாதா எனப்படும் ரங்கராஜனிற்கு எமது அஞ்சலிகள்........

சங்கரின் இயக்கத்தில் சுஜாதாவின் கதை வசனத்தில் வெளிவந்து இன்றும் எம் கண்ணைவிட்டகலாமலுள்ளது சிவாஜி திரைப்படம் ஆயினும் அந்த வசனத்திற்கு சொந்தக்காரர் எம்முடன் இல்லை என்னும்போது எழும் கவலையினை தவிர்க்கமுடியவில்லை.


அவர் எழதிய காயத்ரி, கரையெல்லாம் செண்பகப்பூ, ப்ரியா, விக்ரம், வானம்வசப்படும் போன்ற நாவல்கள் தான் எம்மைவிட்டகன்றுவிடுமா இல்லை அவை பின்னர் திரைப்படமாக்கப் பட்டடது தான் இல்லைஎன்றாகிவிடுமா?

அதுமட்டுமன்றி அவரது கதை, வசனத்தில் வெளிவந்த ரோஜா, இந்தியன், முதல்வன், பாய்ஸ், விசில், கன்னத்தில் முத்தமிட்டால், ஆய்தஎழுத்து, அந்நியன், சிவாஜி திரைப்படங்கள் தானும் எம் மனதில்நின்று நீங்கிவிடுமா?


இவ்வாறு தான் நீங்கினாலும் தன் புகளினை விட்டுச்சென்ற சுஜாதாவின் பாதையினை நாம் முன்னெடுப்போமாக....

Saturday, February 23, 2008

என் காதலி...




நீ வாசல் கடக்கையில்கவர்ந்த வாசனையைபூசிக் கொண்டு மலர்கிறதுகொல்லைபுற மல்லி!

உயிரற்ற செல்களலாக்கப்பட்ட உரோமங்கள்உயிர் பெற்றுகுத்தாட்டம் போடுகின்றன;உன் தாவணி ஸ்பரிசத்தில்!

தென்றலை ஒத்தநடைபயின்று கடந்துச் செல்கிறாய்;ஆயிரம் சூறாவளிகளைஎன்னுள் உருவாக்கிவிட்டு!

என்னுடன் ஓடிவருவதானால் -வீட்டையும் தூக்கிக் கொண்டு வா!உன்னோடு இருபது வருடம்வாழ்ந்த அதனோடுஇருபது நாட்களாவதுவாழ வேண்டும் எனக்கு!

தலை சூட நீ மல்லி சேகரிப்பதுப் போல;என் உயிர் சூடஉன் புன்னகை சேர்க்கிறேன்நான்!

Friday, February 1, 2008

இலங்கை பற்றிய சில துளிகள்......


தலைநகரம் - ஜயவர்தனபுர கோட்டே

பெரிய நகரம் - கொழம்பு

அரச கரும மெழிகள் - தமிழ் சிங்களம்

அரசாங்கம் - ஜனநாயக சமத்துவ குடியரசு

ஜனாதிபதி - மகிந்த ராஜபக்ச

பிரதமர் - ரட்னசிறி விக்ரமசிங்க

சுதந்திரம் - ஜக்கிய இராட்சியத்திடமிருந்து மாசி மாதம் 4ம் திகதி 1948இல்

குடியரசு தினம் - வைகாசி மாதம் 22ம் திகதி 1972இல்

மெத்தப்பரப்பு - 65 610சதுர கி.மீ

சனத்தெகை - 19 668 000(அண்ணளவாக மாத்திரமே)

2001 இல் கணக்கெடுத்ததின் படி 18 732 255.

நாணயம் - இலங்கை ரூபா

சர்வதேச குறி - .lk

அழைப்புக் குறி - +94

நேரம் - இங்கிலாந்து நேரத்திலும் 5.30மணி அதிகம்

சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்...


இலங்கை வலைப்பதிவாளர்கள் அனைவரிற்கும் சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்...

60 ஆண்டுகளாக அன்னியரிடமிருந்து பெற்ற சுதந்திரத்தை நாமெல்லாம் அனுபவிக்கின்றோமா என்பது கேள்வியே..............

ஆயினும் எமது தேசம் பெற்ற சுதந்திரத்தை நாமெல்லாம்

பகிர்ந்துண்டு கொண்டாடுவதிலும்.....

ஏனயோரிற்கு தெரிவிப்பதிலும் மகிழ்சியே....